பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.காதல் - சிந்து

உலக உயிர்களிலே
உலவும் உனக்கு
உருவமில்லை- ஆனால்
உணர்ச்சிகள் உண்டு
உயிரில்லை-ஆனால்
உயிரினுள்
ஊடுருவும் தன்மையுண்டு.

நீ எம்மிடம் வந்தால்
உடன்பிறந்த
உறவுகள் இல்லை
உயிர் கொடுத்த
உற்ற அன்னை இல்லை

உன்னால் எமக்கு
உணவில்லை
உறக்கமில்லை-ஆனால்
உபாதைகள் உண்டு.

நீ எமை பற்றினால்
எம் பார்வை வேறு பாசம் வேறு
பழகிய நட்பும் பகையாகும்
தனிமையே இனிமையாகும்.

பலருள் நீ வந்தாலும்
சிலருள் வேரூன்றுவாய்
சிலருள் மரமாகி
பழம் தருவாய்
சிலருள் முளையிலே
கருகி விடுவாய்
இது விதியின் விளையாட்டா?

காதல் சாதலுக்கு
வரும்முன்
வாழ்தலுக்கு
தயாராக வேண்டும்.


கொய்தது பிச்சி @ 12:29 AM,

1 பின்னூட்டங்கள்:

At April 13, 2007 at 3:17 PM, Blogger leonah சொன்னது...

its superb....

 

Post a Comment

<< இல்லம்