பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.மாவீரர்கள் - சிந்து

முடிவிலிப் போருக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு
முயன்று - வாழ்வில்
முற்றுப்பெற அனுபவிக்காமல்
முடிந்து போனவர்கள் நீங்கள்
முட்களுடன்
முட்டி மோதி
முதன்மையானவர்கள் நீங்கள்

மண்ணில் வந்த
மண்புழுக்கள் - எந்நேரமும்
மண்ணுடன் உறவாடும்.

அதுபோல.....
மானமுடன் வாழ்ந்த
மனிதன்
மானமுடன்
மரணிக்க நினைப்பது தப்பல்ல!

மலரினுள்
மறைந்திருக்கும்
மகரந்தத்தின்
மகிமையை

உலகிற்கே உணர்த்திடும்
வண்டுகள் போல் அல்லவோ
நீங்கள்

மாவீரர்களே உங்கள் பெருமையை.....
மரணத்தின் வாயிலில்
உணர்த்தி விட்டீர்கள்...
எமக்கு!

எங்கள் உயிரை காக்க
உங்கள் உயிரை இம்மண்ணில்
புதைத்தீர்கள்!


கொய்தது பிச்சி @ 12:23 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்