பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி

எல்லாவற்றிலும் எனக்கு பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய் !

உனக்கு பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன் !

அதனால்தான்
நட்பு நம்மை
தேர்ந்தெடுத்திருக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ என்னிடம்
பேசியதைவிட
எனக்காக
பேசியதில்தான்
உணர்ந்தேன்........
நமக்கான நட்பை..!

~~~~~~~~~~~~~~~~~~~

காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல் அவ்வளவு
எளிதன்று.

கொய்தது பிச்சி @ 9:16 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்