பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.



ஈழப் பொங்கல் - கபிலன்.

பீரங்கிகளின்
பாதத்தில்
மண் பானைகளாய்
மண்டையோடுகள் உடைய
பட்டினி கிடக்கிறது
பொங்கல்.
*
பாலசிங்கத்தின்
கல்லறையில் கசியும்
ஊதுபத்தி புகை
அனைத்து தமிழர்களின்
ஆக்ஸிஜன் காற்று.
*
தாய்களின் மார்புகளில்
பொங்கிய
பால் பொங்கலை
குடிப்பதற்கு
எப்படி எழுப்புவது
செத்துப்போன
குழந்தைகளை?
*
கடல் தாண்டி
போய் வந்த பறவையே
எப்படி இருக்கிறார்கள்
எம் தமிழர்கள்?
*
ஆண்டுக்கொரு முறை
தமிழர் திருநாள்
எப்போது பிறப்பார்
தமிழர்?
*
இந்திய விடுதலைக்குப் பின்
பிறந்தவன்
தமிழர் விடுதலைக்காகக்
காத்திருக்கிறேன்.
*
47 இந்தியாவுக்கு
2007 ஈழத்துக்காய்
விடியட்டும்!



கொய்தது பிச்சி @ 8:28 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்