பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.



எப்படி சொல்வது? - இலங்கைப் பெண்

சேலை அணிந்த மாது ஒருத்தி
ஒரு ஆணை சோலை என நம்பி வாழ
அவனோ நான் சோலை இல்லை
சோலையில் இருக்கும் பூக்களில்
தேன் உள்ளவரை மட்டுமே அதை
நுகரும் வண்டு என பதிலளித்தால்
அந்த மாதுவின் நிலை என்ன?
கல்லறையா???
மறுமணமா???
விதி என்பதா???
சதி என்பதா???
எப்படி சொல்வது????


கொய்தது பிச்சி @ 1:34 AM, ,




காதல் - சிந்து

உலக உயிர்களிலே
உலவும் உனக்கு
உருவமில்லை- ஆனால்
உணர்ச்சிகள் உண்டு
உயிரில்லை-ஆனால்
உயிரினுள்
ஊடுருவும் தன்மையுண்டு.

நீ எம்மிடம் வந்தால்
உடன்பிறந்த
உறவுகள் இல்லை
உயிர் கொடுத்த
உற்ற அன்னை இல்லை

உன்னால் எமக்கு
உணவில்லை
உறக்கமில்லை-ஆனால்
உபாதைகள் உண்டு.

நீ எமை பற்றினால்
எம் பார்வை வேறு பாசம் வேறு
பழகிய நட்பும் பகையாகும்
தனிமையே இனிமையாகும்.

பலருள் நீ வந்தாலும்
சிலருள் வேரூன்றுவாய்
சிலருள் மரமாகி
பழம் தருவாய்
சிலருள் முளையிலே
கருகி விடுவாய்
இது விதியின் விளையாட்டா?

காதல் சாதலுக்கு
வரும்முன்
வாழ்தலுக்கு
தயாராக வேண்டும்.


கொய்தது பிச்சி @ 12:29 AM, ,




மாவீரர்கள் - சிந்து

முடிவிலிப் போருக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு
முயன்று - வாழ்வில்
முற்றுப்பெற அனுபவிக்காமல்
முடிந்து போனவர்கள் நீங்கள்
முட்களுடன்
முட்டி மோதி
முதன்மையானவர்கள் நீங்கள்

மண்ணில் வந்த
மண்புழுக்கள் - எந்நேரமும்
மண்ணுடன் உறவாடும்.

அதுபோல.....
மானமுடன் வாழ்ந்த
மனிதன்
மானமுடன்
மரணிக்க நினைப்பது தப்பல்ல!

மலரினுள்
மறைந்திருக்கும்
மகரந்தத்தின்
மகிமையை

உலகிற்கே உணர்த்திடும்
வண்டுகள் போல் அல்லவோ
நீங்கள்

மாவீரர்களே உங்கள் பெருமையை.....
மரணத்தின் வாயிலில்
உணர்த்தி விட்டீர்கள்...
எமக்கு!

எங்கள் உயிரை காக்க
உங்கள் உயிரை இம்மண்ணில்
புதைத்தீர்கள்!


கொய்தது பிச்சி @ 12:23 AM, ,




சிரிப்புத்தான் வருகிறது - ஷீ-நிசி

அவசரமாக வந்த சிறுநீரை
அருகிலேயே வெளியேற்றிவிட்டு
தொடர்ந்து எழுத ஆரம்பித்தான் சுவற்றில்..

"நாய்கள் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்"
என்ற வாசகத்தை!

கொய்தது பிச்சி @ 4:18 AM, ,




தேசத்தின் குரல் (ஆன்ரன் பாலசிங்கம்) - இலக்கியன்

தேசத்தின் குரலோனே
செங்கதிர் சொல்லோனே
தேசியத்தின் சுவடோடு
சென்றுவிட்ட வல்லோனே
தமிழ் வாழும் நாள் எல்லாம்
வாழ்ந்திடுவீர் எம்மோடே

காலனின் வருகை கண்டும்
கலங்கினீர் தமிழனுக்காய்
காலம் கனியும் நேரத்தில்
கவர்ந்து விட்டான் காலதேவன்

பேனா முனைகளிலே
பேசியது உம் உணர்வு
துப்பாக்கித் தோட்டாவாக
துளைத்தது சிங்களத்தை

பேச்சுவார்த்தை மேசைகளில்
பேரமிட்ட சிங்கள துவேசிகளை
மதியுரைஞர் உம் மதியினாலே
மதியிழந்து கலங்கவைத்தீர்

போரும் சமாதனமும் தந்தீர்
போற்றுகின்ற பொக்கிசமாய்
நோய் வந்து உழன்றபோதும்
நேசித்தீர் சமதானத்தை

தேசியத்தலைவரின்
நேசத்துக்குரிய நண்பா
தேசம் போற்றும் உம்
நேசக்கரம் என்றும்


கொய்தது பிச்சி @ 4:15 AM, ,




என்னைக் காதலித்துப் பார் - பத்மஜா

தேனை சுவைத்த நாக்குடன்
தேனாய் இனிக்க பேசும்
தேன்மொழி என் ராதையே
என்னைக் காதலித்துப் பார்

துரத்தி விட்ட கவலைகளுடன்
துரத்தும் வாழ்வின் பள்ளங்களை
துரத்தி விளையாடும் கண்மணியே
என்னைக் காதலித்துப் பார்

அழகான முகநயங்கள் கொண்டு
அழகால் பிறரைக் கவர்ந்தாலும்
அழகை ரசிக்கக் கற்றவளே
என்னைக் காதலித்துப் பார்

கண்களிலே கண்ணீர் சொரிந்து
கண்ணனாம் என்னையே நினைத்து
கண்ணை கட்டும் கட்டழகியே
என்னைக் காதலித்துப் பார்

காதலிலே காமத்தைக் கழித்து
காதலியாய் ரசனை சேர்த்து
காதலைத்தான் புரிந்துக் கொள்ள
என்னைக் காதலித்துப் பார்

கவிதையால் என்னை நனைத்தாலும்
கவிதையிலே உண்மைக் கலந்து
கவிதையாய் வாழும் ராதையே
என்னைக் காதலித்துப் பார்

விரதமின்றி என்னை அணுகி
விரசமின்றி என் கைகோர்த்து
விருப்புடன் அன்பை அறிய
என்னைக் காதலித்துப் பார்

உன்னை சிரிக்கவைக்க நானிருக்க
உன்னை கடிந்துகொள்ள நானிருக்க
உன்னை ஏற்றுக்கொள்ள நானிருக்க
என்னை மட்டும் காதலித்துப் பார் --  --   --   பத்மஜா


                                                                  

கொய்தது பிச்சி @ 11:17 AM, ,




முதன்முதலாய் அம்மாவுக்கு - கவிஞர் வைரமுத்து

ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே

காத்தெல்லாம் அவன்பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் அவன்பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே

எழுதவோ படிக்கவோ
இயலாத தாய்பற்றி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் விட்டேனோ

பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே

வயிரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப

கத்தி எடுப்பவனோ
களவாடப் பிறந்தவனோ
தரணியாள வந்திருக்கும்
தாசில்தார் இவன்தானோ

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக்குழம்பு மேலை
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரையேத்தி விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா...

கொய்தது பிச்சி @ 9:25 AM, ,