பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.



என்னைக் காதலித்துப் பார் - பத்மஜா

தேனை சுவைத்த நாக்குடன்
தேனாய் இனிக்க பேசும்
தேன்மொழி என் ராதையே
என்னைக் காதலித்துப் பார்

துரத்தி விட்ட கவலைகளுடன்
துரத்தும் வாழ்வின் பள்ளங்களை
துரத்தி விளையாடும் கண்மணியே
என்னைக் காதலித்துப் பார்

அழகான முகநயங்கள் கொண்டு
அழகால் பிறரைக் கவர்ந்தாலும்
அழகை ரசிக்கக் கற்றவளே
என்னைக் காதலித்துப் பார்

கண்களிலே கண்ணீர் சொரிந்து
கண்ணனாம் என்னையே நினைத்து
கண்ணை கட்டும் கட்டழகியே
என்னைக் காதலித்துப் பார்

காதலிலே காமத்தைக் கழித்து
காதலியாய் ரசனை சேர்த்து
காதலைத்தான் புரிந்துக் கொள்ள
என்னைக் காதலித்துப் பார்

கவிதையால் என்னை நனைத்தாலும்
கவிதையிலே உண்மைக் கலந்து
கவிதையாய் வாழும் ராதையே
என்னைக் காதலித்துப் பார்

விரதமின்றி என்னை அணுகி
விரசமின்றி என் கைகோர்த்து
விருப்புடன் அன்பை அறிய
என்னைக் காதலித்துப் பார்

உன்னை சிரிக்கவைக்க நானிருக்க
உன்னை கடிந்துகொள்ள நானிருக்க
உன்னை ஏற்றுக்கொள்ள நானிருக்க
என்னை மட்டும் காதலித்துப் பார் --  --   --   பத்மஜா


                                                                  

கொய்தது பிச்சி @ 11:17 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்